Its all about opening to a fresh world with new experience...
Join along for the fun.

Disclaimer: Entering this blog and reading any further is at your own risk. No Guarantee and warranty given!!

Sunday, July 30, 2017

Scraps


எத்தனை எத்தனை மாற்றங்கள் 

எத்தனை மாற்றங்கள் .. எத்தனை மாறுதல்கள் ..
அதில் தான் எத்தனை சுவாரஸ்யங்கள் !!

சேய்யாய் இருந்தேன் ..
காதல் கணவனுக்கு சேவை செய்யும் தாரமானேன் ..
பின்பு எனக்கென்று  ஓர் சேய் ..

எத்தனை எத்தனை மாற்றங்கள் ..
அதில் தான் எத்தனை தடுமாற்றங்கள் !!

இந்த மாற்றத்தில் காதல் காணாமல் போனதா ,
இல்லையெனில் .....
காதலும் நம்மை போல்  உருமாறியதா ??

எத்தனை எத்தனை மாறுதல்கள் ...
அதில் தான் எத்தனை உருமாறுதல்கள் !!

...........................................

காதலுடன்  ஓர் உரையாடல்! 

இன்பான காதலே ..
என் வாழ்வில்  அது எங்கே  என்று கேட்டேன்..
அதற்கு காதல் கூறிய பதில் இதோ...

குட்டி குட்டி கோபங்கள்
சின்ன சின்ன சண்டைகள்
ரசிக்கவைக்கும் ஊடல்கள்
ஏங்க வைக்கும் கொஞ்சல்கள்
மிஞ்சவைக்கும் கெஞ்சல்கள்..
இதில் இல்லையா காதல்? 

அவனுக்கு  பிடிக்காது என்பதால் நீ இழந்தவைகளும் ....
உனக்கு பிடிக்கும் என்பதால்
அவன் கற்றுக்கொண்டவைகளும் தானே காதல் !

உனக்கான அவன் தவிப்பும்...
அவனுக்காக உன் அக்கறையும் காதலே !

அவன் மீதான உன் பொய் கோபமும்
உன் மீது அவன்  இடும் பொய் சண்டையும்
தான் உங்கள் காதல் !!

காதலின் வடிவம் மாறும் 
அதன் வலிமை மாறுமோ ?